சினிமா

சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்த நம்ம வீட்டு பிள்ளை! இத்தனை கோடி வசூலா!

Summary:

Sivakarthikayan nama veettu pillai

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு சின்னத்திரையின் மூலம் வெள்ளிதிரைக்கு வந்தவர். தனது கடினமான உழைப்பால் உயர்ந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவாவுக்கு சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்து வந்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் சிவாவுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டும் 60 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் சாதனை படைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement