சினிமா

சிவகார்த்திகேயனின் மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் எழுந்த பிரச்சனை! திரைத்துறையில் இருந்தால் இதெல்லாம் சாதாரணம் என ஆறுதல் கூறிய மனைவி!

Summary:

Sivakarthikayan

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாகவும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் முழுக்க முழுக்க தனது திறமையாலும், உழைப்பாலும் சினிமாவில் முன்னேறிய நடிகர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அந்த சமயத்தில் தனது மனைவி மற்றும் மகள் சம்பந்தமாக ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார். தனது மனைவி ஆர்த்தி சிவாவின் சொந்த தாய் மாமன் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். 

மேலும் அவர் பெரிய வசதியான வீட்டு பெண்ணாக இருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் அமைதியாக இருப்பார். மேலும் குழந்தை ஆராதனாவை வளர்ப்பது முதல் வீட்டின் வரவு, செலவு கணக்கு, வருமான வரி கணக்கு என அனைத்தையும் அவர் தான் பார்த்து கொள்கிறார் என்று கூறியுள்ளார். 

மேலும் ஆர்த்தி கர்ப்பமாக இருந்த சமயத்தில் நான் அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. நான் இந்த விஷயத்தை அவரிடமிருந்து மறைத்து விடலாம் என்று தான் நினைத்தேன்.ஆனால் அவரே அதை தெரிந்து என்னிடம் வந்து திரைத்துறையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக வரும் என்றும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஆறுதல் அளித்தார். மனைவி குழந்தையினை பார்க்காமல் இருக்க முடியாததால் நான் எங்கு வெளியே சென்றாலும் அவர்களையும் அழைத்துச் சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.


Advertisement