கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
செம கலக்கலான கூட்டணி.! சிம்புவின் ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.! பரவும் சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெங்கட் பிரபு மாநாடு, மன்மதலீலை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவிற்கு தாவி நாகசைதன்யாவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இதன் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் ராணா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 'மாநாடு' திரைப்படம் உருவான சமயத்திலேயே சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. தற்போது சிவகார்த்திகேயன் 'ப்ரின்ஸ்' படத்தை முடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில், மற்றும் மண்டேலா' மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' போன்ற படத்தில் நடிக்கிறார்.
அவற்றை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23வது படத்திற்காக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணியில் இணைவார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த கலகலப்பான காம்போ இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.