சினிமா

கூட்டணி சேரும் சிவா - யோகிபாபு.. படத்தின் பேரு என்ன தெரியுமா..? டைட்டிலே செம மாஸா இருக்கு..

Summary:

நடிகர் சிவா மற்றும் யோகி பாபு சேர்ந்த நடிக்கும் படத்திற்கு சலூன் என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவா மற்றும் யோகி பாபு சேர்ந்த நடிக்கும் படத்திற்கு சலூன் என பெயரிடப்பட்டுள்ளது.

யோகிபாபுவை வைத்து தர்ம பிரபு என்ற படத்தை இயக்கிய அப்படத்தின் இயக்குனர் முத்துகுமரன் தற்போது நடிகர் சிவா மற்றும் யோகிபாபுவை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவா ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு படக்குழு சலூன் என பெயரிட்டுள்ளது. மிகவும் வித்தியாசன பெயர் மற்றும் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முதலாளி சிவா மற்றும் தொழிலாளி யோகி பாபு எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்டரை பார்க்கும்போது, சலூன் கடைகளில் நடக்கும் காமெடியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்துகுமரன் இயக்கத்தில் வெளியான தர்ம பிரபு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Advertisement