பிரமாண்டமாக துவங்கியிருக்கும் சித்தி 2 சீரியல்! ரசிகர்களை குஷி படுத்த முதல் நாளில் இப்படி ஒரு ஸ்பெஷலா!
இன்று மக்கள் திரையைத் தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர், நடிகைகளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் படத்தைவிட பிரம்மாண்டமாக சீரியலை தயாரித்து வருகின்றனர். அதிலும் மக்களின் ரசனைக்கு ஏற்றார்போல் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார்.

மேலும் ராதிகாவை வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையிலும் ஜொலிக்க வைத்தது இந்த சீரியல். இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் இன்று மிகவும் பிரமாண்டமாக துவங்கியிருக்கிறது. எனவே இன்று முதல் நாள் என்பதால் சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பப்படுவதாக நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் டுவிட் செய்துள்ளார்.
From today @SunTV at 9pm. Today is a mega episode of one hour 9- 10pm. Hard work never fails🙏🙏🙏wishes to the team. pic.twitter.com/zXWZkXuJWS
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2020