அடக்கடவுளே.. இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது.. அண்ணாத்த பட பாடகரின் பரிதாப நிலை..! மனைவி முதல் குழந்தைகள் வரை யாருக்குமே கண்பார்வை இல்லை..! 



Singer samsutheen family interview

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் இடம்பெற்ற வீச்சருவா என்ற பாடலை இசையமைப்பாளர் இமானின் இசையமைப்பில் திருமூர்த்தியுடன் இணைந்து பாடிய பாடகர் சம்சுதீன். 

இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அதில் சம்சுதீன் மட்டுமல்லாது அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் பார்வைத்திறனற்றவர்கள் என்ற தகவலை கூறியது பார்ப்பவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Singer samsutheen

அவர் கூறியதாவது, "மேடை கச்சேரிகளில் பாடி வந்தபோது கொரோனா காலகட்டத்தில் எவ்வித வாய்ப்பு கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியிருந்தேன். அப்போது கர்ணன் திரைப்படத்தில் வெளிவந்த கண்டா வர சொல்லுங்க என்ற பாடலை பெண் குரலில் மாற்றிபாடவே, அந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இமான் அண்ணாத்த திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்" என கூறினார்.

இவருக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஆகும். தற்போது தனது மனைவிகளுடன் மதுரையில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். சம்சுதீன் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, உடன்படிக்கும் மாணவியை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

அவருக்கும் முழு பார்வை கிடையாது. இவர்களுக்கு பிறந்த 2 குழந்தைகளும் பார்வையற்றவர்களாகவே பிறந்துள்ளனர். குழந்தைக்கான சிகிச்சைக்காக இமான் அவர்களே செலவு செய்ததாகவும், ஆபரேஷனுக்கு உதவியபோதும் பார்வை எப்போது கிடைக்கும் என்று உறுதி செய்யப்படாமல் இருக்கின்றனர். 

இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் தனது குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சம்சுதீன் போராடி வருகிறார். பொருளாதார சிக்கல் பார்வையற்ற தன் மனைவியின் துணையோடு அவர்களது விருப்பப்படி படிக்க வைத்துவிட வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பதாக அவர் கூறியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.