கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை சிம்ரன் விடுத்த வேண்டுகோள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!



simran-request-to-take-a-corono-vaccination

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சிம்ரனும் அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு தடுப்பூசிதான் சிறந்த வழி. நான் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அதே போல் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தயவுசெய்து உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.