நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
'சியான் 60 ' படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடி இந்த சூப்பர் ஹிட் நடிகையா? அப்போ செம கலக்கல் தான்!!

தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் சியான் 60. இத்திரைப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக அவர் அப்படத்திலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
சியான் 60 படத்தில் வாணி போஜன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் இருவரும் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் சிம்ரன் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.