சினிமா

மீண்டும் அவருடனே கூட்டணி.! ஈஸ்வரன் பட இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்த சிம்பு.!

Summary:

ஈஸ்வரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனது அடுத்த படம் குறித்து தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்தில், உருவாக்கப்பட்ட இந்தப் படம், வருகிற பொங்கல் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிம்பு, பேசுவதற்காக மேடையில் மைக்கை பிடித்த போது, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.

இதில் பேசிய சிம்பு தான் அடுத்ததாக நடிக்கும் படங்கள் குறித்து தெரிவித்தார். ஈஸ்வரனுக்கு பின் மாநாடு, பத்து தல போன்ற படங்களில் நடிக்க உள்ளார். அதன்பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அவர் கூறினார். 


Advertisement