மாற்றம் முன்னேற்றம்; அசத்தலான சிம்புவின் புதிய லுக்.. வைரலாகும் கிளிக் இதோ.!



Simbu New Look

 

வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து மாநாடு, கெளதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு, ஒபேலி கிருஷ்ணாவுடன் சேர்ந்து பத்து தல என நீண்ட இடைவெளிக்கு பின்னர் அடுத்தடுத்து 3 படங்கள் சிம்புவுக்கு ஹிட் அடித்தது. 

தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில், கமலின் தயாரிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், நடிகர் சிம்புவுடன் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிம்பு அதிகமாக தலையில் முடி வளர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மாறுபட்ட தோற்றத்தில் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.