சினிமா

முகத்தை மறைத்தவாறே யாரையும் பார்க்காமல் ஓட்டமெடுத்த நடிகர் சிம்பு! ஏன் இப்படி? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Summary:

திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்ற நடிகர் சிம்பு தனது முகத்தை மறைத்தவாறே காரில் ஏறி சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு என்ற  திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில்  பாரதிராஜாவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு நீண்டகாலமாக தீவிரமாக உடல் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை 20க்கும் அதிகமான எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்புவின் புகைப்படங்கள் எதுவும் சமீபகாலமாக இணையதளத்தில் வெளிவரவில்லை.

மேலும் அவரது கெட்டப் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என இயக்குனர் சுசீந்தரன் தரப்பில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சிம்பு திருப்பதிக்கு தரிசனம் செய்ய  சென்றதாகவும், அவரை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது அவர் தனது கெட்டப் வெளியே  தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement