மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
காக்கிசட்டை, கழுத்துல கர்ச்சீப்.. புதிய கெட்டப்பில் அசத்தும் சிம்பு! இந்த மாஸ் வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் மனதையும் பெருமளவில் கவர்ந்தவர் சிம்பு. டி.ராஜேந்தரின் மகனான அவர் பின்பு ஹீரோவாகவும் அவதாரமெடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இடையில் சில காலம் அவர் நடித்த படங்கள் தோல்வியையே தழுவி வந்த நிலையில் இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்று பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், ஆட்டோ ஓட்டுனர் போல காக்கிசட்டை உடையணிந்து, கழுத்தில் கர்ச்சீப் போட்டு ஆட்டோவில் உள்ளார். இது எந்த படத்திற்கான கெட்டப் என்ற தகவல் வெளிவரவில்லை. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalaivan @SilambarasanTR_ latest video! 🎥 #Atman #SilambarasanTR pic.twitter.com/o50vYIq9jQ
— STR Silambarasan (@STRFans) April 11, 2022