
குக் வித் கோமாளி-3 நிகழ்ச்சியில் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா.?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் ரசிக்கும் வகையில் இருந்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று தான் குக் வித் கோமாளி ஷோ. இந்த ஷோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது 6 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
இந்நிலையில், இதில் இன்று இம்யூனிட்டிகாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இன்று இம்யூனிட்டியை வெல்லும் நபர் குக் வித் கோமாளி 3 யில் டாப் 5 இடத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்ற சர்ப்ரைஸை வைத்தனர்.அதன்படி இன்றைய இம்யூனிட்டியை வென்று டாப் 5 இடத்தில் முதல் நபராக முதல் பைனலிஸ்டாக ஸ்ருதிகா உள்ளே செல்கிறார்.
Advertisement
Advertisement