"மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசாதீங்க" பத்திரிக்கையாளரிடம் கடிந்து கொண்ட ஸ்ருதிஹாசன்.!?

"மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசாதீங்க" பத்திரிக்கையாளரிடம் கடிந்து கொண்ட ஸ்ருதிஹாசன்.!?


shruthi-hasan-viral-pressmeet-video

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் முதன் முதலில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

Shruthi

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

தற்போது தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வரும் ஸ்ருதிஹாசன், பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது காதலருடன் வெளிநாட்டில் ஜாலியாக வாழ்க்கையை கழித்து வருகிறார். அவ்வப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியும் வருகிறார்.

Shruthi

இது போன்ற நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசனிடம், மற்ற நடிகர்களின் பான் இந்தியா படங்களை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு ஸ்ருதிஹாசன் "மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து ஃபான் இந்தியா நடிகையாக மாறிவிட்டேன். என்னுடைய பழைய நேர்காணல்களை பார்த்தால் பான் இந்தியா என்ற வார்த்தையை கூறி இருப்பதை பார்க்கலாம்" என்று பத்திரிகையாளரை கடிந்து பேசினார்.