பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
உலகமே கொண்டாடும் தனது மகனுக்காக, விஜய்யின் தாய் எழுதிய உருக்கமான கடிதம்.! மெய்சிலிர்த்த ரசிகர்கள்!!
உலகமே கொண்டாடும் தனது மகனுக்காக, விஜய்யின் தாய் எழுதிய உருக்கமான கடிதம்.! மெய்சிலிர்த்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கென ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு உலகமே கொண்டாடும் தனது மகனுக்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் தனது கைகளாலேயே எழுதிய கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்டு விஜய் ரசிகர்கள் மேலும் பெருமிதம் கொண்டுள்ளனர்.
இதோ அந்த கடிதம்