அதிரடியாக நுழைந்து பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய நபர்.! இப்படி கலாய்த்து தள்ளுகிறாரே !! கலக்கல் வீடியோ இதோ..



sherin family entering bigboss house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர் .

Sherin

 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய freeze டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி நேற்றைக்கு முதல்நாள் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நேற்று தர்சன், வனிதா மற்றும் சேரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று கவினின் நண்பர் மற்றும் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை லாலா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தரவுள்ளனர். அவர்களை தொடர்ந்து  தற்போது ஷெரின் அம்மாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் வந்தவுடனேயே லாஸ்லியா, சாண்டி, முகென் என அனைவரிடமே நன்கு பேசி கலாய்த்துள்ளார். மேலும் ஷெரின் அம்மாவுடன் வந்திருந்த பெண்ணனை முகென் வீட்டிற்குள் அழைத்து சென்றபோது, டேய் முகேனு அபிராமி திட்டும்டா என்று கூறி பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாகியுள்ளார்.