இந்தியா சினிமா

ஆசையை தூண்டிய ஜிம் மாஸ்டர்..! குறுக்குவழியில் இறங்கிய சீரியல் நடிகை..! தற்கொலையில் முடிந்த சோக சம்பவம்.!

Summary:

Serial actress Sejal Sharma Suicide case update

சினிமாவில் குறுகிய காலத்திற்குள் பிரபலமாகவேண்டும் என்ற ஆசையில் இளம் நடிகை ஒருவர்  காரியம் அவரை தற்கொலைவரை கொண்டுசென்ற சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சேஜல் சர்மா. 25 வயதான சேஜல் சர்மா சினிமாவில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக மும்பைக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். அவரது முயற்சிக்கு பலனாக முதலில் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சீரியலில் நடித்துவந்த அவர் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனிடையே சேஜல் சர்மாவுக்கு ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சேஜல் சர்மாவின் ஆசையை புரிந்துகொண்ட ஆதித்யா வசிஷ்ட், பில்லி சூனியம் செய்தால் விரைவில் சினிமாவில் பிரபலமாகிவிடலாம் என  ஆசை வார்த்தை கூறி, அவரை நம்ப வைத்துள்ளார்.

சினிமா நாயகி ஆகவேண்டும் என்ற ஆசையில் சேஜல் சர்மாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து, அதற்காக தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவுக்காக ஆதித்யா வசிஷ்ட் இடம் கொடுத்துள்ளார் சேஜல் சர்மா. மேலும் ஆதித்யாவை அவர் ஒரு கட்டத்தில் காதலித்ததாகவும் தெரிகிறது.

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தநிலையில் ஒருகட்டத்தில் ஆதித்யா வசிஷ்ட் கூறிய அனைத்தும் பொய், தனது பணத்தை பறிக்கவே அவர் இப்படி கூறியது  சேஜல் சர்மாவுக்கு தெரியவர மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் சர்மா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகையின் தாயார் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆதித்யாவின் மோசடியை கண்டுபிடித்து அவரை தற்போது கைது செய்துள்ளனர். குறுகிய காலத்திற்குள் சினிமாவில் பிரபலமாகவேண்டும் என்ற ஆசையில் இளம் நடிகை செய்த காரியம் அவரை தற்கொலைவரை கொண்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement