புதிய தொடரில் களமிறங்கும் நடிகை ரேஷ்மா... எந்த தொலைக்காட்சி, யாருக்கு ஜோடியாக தெரியுமா.?Serial actress reshma joined in new serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற தொடரின் மூலம் சின்ன திரை தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். அவரின் முதல் தொடரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபி டெய்லர் என்ற தொடரில் நடித்தார்.

பின்னர் விஜய் டிவியில் நடிகர் விஜயின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய ரோலில் நடித்த கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்தார். ஆனால் அந்த சீரியல் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது. இந்நிலையில் அடுத்ததாக நடிகை ரேஷ்மா எந்த தொடரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

அதாவது நடிகை ரேஷ்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஒன்றில் நடிகர் ஜெய் ஆகாஷ் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க இருக்காராம். ஆனால் அந்த சீரியல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..

இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!