சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.! Sasikumar Starring Karudan Movie Trailer Today Out 

 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகள் வரை காமெடி திரைப்படங்களில் பெருமளவு கவனம் செலுத்தி நடித்து வந்த சூரி, விடுதலை திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

கருடன் திரைப்படம்

அந்த வகையில், வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி மகளின் இறப்புக்கு காரணம் இதுதானாம்; உண்மையை போட்டுடைத்த பிரபல பின்னணி பாடகி.!

இன்று ட்ரைலர் வெளியீடு

மே மாதம் 31ம் தேதி திரையரங்கில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக திரைப்பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகிறது. சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தியா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மேலும், பல தரப்பிலும் பாராட்டுகளை குவித்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது அவர் வெற்றிமாறனின் எழுத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வர அடித்தளமிடும் சூர்யா?... நிர்வாகிகள் விறுவிறுப்புடன் நியமனம்.!