தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வர அடித்தளமிடும் சூர்யா?... நிர்வாகிகள் விறுவிறுப்புடன் நியமனம்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் சூர்யா, கடந்த 1997 ல் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் நடித்து மக்களின் பேராதவரை பெற்ற சூர்யா, அகரம் அறக்கட்டளையை தொடங்கி பல ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார். பல சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்
சூர்யா நற்பணி மன்றம்:
நடிகரானதில் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடிகராக நடித்தவர், 2 டி என்டேர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தனது சூர்யா நற்பணி இயக்கத்தின் வாயிலாக பல அறம்சார்ந்த பணிகளையும் நிர்வாகிகள் வாயிலாக முன்னெடுத்து இருக்கிறார். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் 2026 ல் நடிகர் விஜய் அரசியலில் போட்டியிடுவதை உறுதி செய்து, அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: "இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
அரசியலுக்கு வரும் சூர்யா?
இதனிடையே, நடிகர் சூர்யாவும் தனது நற்பணி இயக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய சூழலில் சூர்யாவின் நற்பணி இயக்கம் 60 மாவட்டமாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்தல், எதிர்கால திட்டமிடல் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்துதல் என சூர்யா நற்பணி இயக்கம் விறுவிறுப்பு பெற்றுள்ளது. இதனால் சூர்யாவும் அரசியலுக்கு வருகிறாரா? அல்லது விஜயுடன் இணைந்து பணியாற்ற தனது நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே ஹனிமூன்னா!! வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி ஜாலி டூர்.! வைரல் புகைப்படங்கள்!!