இறப்பதற்கு முன் நடிகை ப்ரியங்கா பேசிய கடைசி வார்த்தைகள் - நெஞ்சை உருக்கும் சோகம்!
இறப்பதற்கு முன் நடிகை ப்ரியங்கா பேசிய கடைசி வார்த்தைகள் - நெஞ்சை உருக்கும் சோகம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் வம்சம் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் ப்ரியங்கா.
32 வயதாகும் பிரியங்கா சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார். ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய இவர். பின், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில். இந்த பிரச்சனை ஏற்பட என்ன காரணம் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரியங்காவிற்கும் இவருடைய கணவருக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன போதிலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது தொடர்பாக இவருக்கும், அவருடைய கணவர் முனீர் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடைசியாக, நடிகை பிரியங்கா அவருடைய அம்மாவிடம், தான் வைத்துள்ள beauty parlour கொஞ்சம் விரிவாக்கம் செய்கிறேன்..கண்டிப்பாக பால் காய்ச்சும் நிகழ்வுக்கு வந்து விடுங்கள் என கூறி உள்ளாராம்.
பிரியங்காவின் இறுதி சடங்கின் போது, அவருடைய தாயார் இதனை மற்றவர்களிடம் உருக்கமாக தெரிவித்து அழுதுள்ளார்.சமீப காலமாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அவ்வப்போது தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.