பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய அஞ்சலி! ரசிகர்களுக்கு அவர் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய அஞ்சலி! ரசிகர்களுக்கு அவர் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...


serial-actress-kanmani-manokaran-changed-in-bharathi-ka

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள்  உள்ளன.

இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும்  புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருபவர் கண்மணி மனோகரன். ஆரம்பத்தில் இத்தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது மிகவும் நல்லவராக  நடித்து  வந்தார்.

இந்நிலையில்  அஞ்சலியாக நடித்து வந்த   கண்மணி மனோகரன் தற்போது  பாரதி  கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என  தகவல்கள்  வெளியாகின. மேலும் அவரை நீண்ட நாட்களாக சீரியலில் பார்க்கமுடியாத காரணத்தால் அவரது ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

anjali

 

இதை  உறுதி  செய்யும் வகையில் அஞ்சலி பாரதி  கண்ணம்மா தொடரில்  இருந்து வெளியேறிவிட்டதாகவும், மேலும் வேறொரு ப்ராஜெக்ட்டில் உங்களை entertain செய்கிறேன் எனவும் அவரே  தனது  இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார்.