சீரியல் நடிகைக்குள் வெடித்த மோதல்! என்ன இப்படி சொல்லிடீங்களே.. அதிர்ந்துபோன ரசிகர்கள்!



serial-actress-fight-in-social-media

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர், நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி மிகவும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். 

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சித்ராவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனை கண்ட ரசிகர்கள் கிளாமரான புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.

அதற்கு அவர் அது இங்கே நடக்காது. அப்படிப்பட்ட படங்களை பார்க்க வேண்டுமெனில் 2000ல் பிறந்ததாக கூறப்படும் நடிகையிடம் எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் நீங்கள் பகல்நிலவு சீரியல்  நடிகை ஷிவானியை தானே  சொல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். 

Social media

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஷிவானியின் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர் பதிலளிக்கும் வகையில்,  மற்றவர்களை பற்றி பேசும் முன் முதலில் உன் முதுகை பார். உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும் என்னை தினமும் பார்க்கும் நீயும் எனது ரசிகர்தான் என மோசமான வார்த்தையால் கூறியுள்ளார். இதனால் இணையதளத்தில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.