சினிமா

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு திடீர் தற்கொலை! இதுதான் காரணமா? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

ஆந்திராவை சேர்ந்தவர்  நடிகை ஸ்ராவணி. இவர் தெலுங்கில் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது காதலர் தேவராஜ் ரெட்டி மற்றும் அவரது முன்னாள் காதலர் சாய்கிருஷ்ணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 உள்ளிட்ட சில படங்களை தயாரித்த அசோக் ரெட்டி என்பவர் ஸ்ராவணியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயற்சி செய்த நிலையில் அசோக் ரெட்டி தலைமறைவாகி விட்டார்.

மேலும் ஸ்ராவணி மற்றும் சாய்கிருஷ்ணா இருவரும் காதலித்து பிரிந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஸ்ராவணி தேவராஜ் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு அசோக் ரெட்டி தயாரித்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. இவ்வாறு மூன்று பேருமே ஸ்ராவணியை திருமணம் செய்து கொள்வதாக உடல் ரீதியாக துன்புறுத்தி ஏமாற்றியதாலேயே அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement