என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
சில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்! செம அப்செட்டான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.மேலும் சீரியல்களில் ஒரு எபிசோடை கூட தவற விடாமல் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வந்த தொடர் செந்தூரப்பூவே.
இத்தொடரில் கதாநாயகனாக, தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் ரஞ்சித் நடிக்கிறார். இந்த தொடர் முதல் மனைவி இறந்துவிட தனது இரு மகள்களுக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் குடும்ப பாங்கான கதையாக சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இவரது முதல் மனைவியாக, பேய் கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். மேலும் தொடர் தற்போது ஆன்மா, மாந்திரீகம் என்று வித்தியாசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தொடர் திடீரென தற்காலிகமாக சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கவிருப்பதால் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.