13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
அடித்தது அதிர்ஷ்டம்! ஹீரோவாக அறிமுகமாகிறார் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்! படம் பேர் என்ன தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இதில் சிறுவர்களுக்கு தனியாகவும், இளைஞர்கள் இளம் பெண்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சீசனில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்கணேஷ், மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். நாட்டுப்புற கலைஞர்கலான இவர்களை தேடி கண்டுபிடித்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கூட்டிவந்தது விஜய் தொலைக்காட்சி.
ஆரம்பம்முதலே தம்பதியினர் இருவரும் மிகவும் பிரபலமாக தொடங்கினர். இவர்களது பாட்டை கேட்கவே மக்கள் டிவி முன்பு அமர தொடங்கினர். சூப்பர் சிங்கர் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியபோது ராஜலஷ்மி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் இறுதிவரை சென்ற செந்தில் கணேஷ் தனது திறமையால் சூப்பர் சிங்கர் 6வது சீஸனின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். போட்டியில் வென்றதாக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு இவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பும் செந்தில்கணேஷ் அவர்களுக்கு கிடைத்தது.
இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நம் செந்தில்கணேஷ். கரிமுகன் என்ற படத்தில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.படத்தின் சில ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.