வெளியான ரஜினி மகள் திருமண வீடியோ! நீங்க பாத்துட்டீங்களா?



sawntharya-rajinikanth-second-marriage-video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

rajinikanth

அதனை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 11 ) சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது. திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் மேலும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது.