சினிமா

விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Summary:

sarkkar-padal-veluyedu-vijay-rasikargal-pattasu-vedithu-kondattam

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள சர்க்கார் படம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று சர்க்கார் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியானது. சர்க்கார் படத்தின் பாடல் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படம் விஜயின் 62 வது படம். ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜயை வைத்து இயக்கும் படம் சர்க்கார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் நடித்துள்ள படத்திற்கு நான்காவது முறையாக இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் வெளியான சிம்டாங்காரன் பாடல் இணையத்தளத்தில் "சிம்டாங்கரான்" ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. சிம்டாங்காரன் என்ற வார்த்தைக்கு பாடல் ஆசிரியர் விவேக் ட்விட்டரில் "கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று அர்த்தம் தெருவித்திருக்கிறார். ரசிகர்கள் எங்களுக்கு தீபாவளி இப்போவே ஸ்டார்ட் ஆகி விட்டது என்று மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.      

 


Advertisement