சினிமா

சர்கார் இசைவெளியீடு விழாவில் தளபதி விஜய் சொன்ன வார்த்தை தவறு இல்லை... பா.விஜய் விளக்கம்...!

Summary:

sarkar-movie-audio-release-news

சர்கார் இசைவெளியீடு விழாவில் தளபதி விஜய் சொன்ன வார்த்தை தவறு இல்லை... பா.விஜய் விளக்கம்...! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் படம் "சர்க்கார்". இந்த படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியபோது பல அரசியல் கருத்துக்களை பேசினார்.  அப்போது பேசிய தளபதி விஜய்  ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனு கூறினார்.  

மேலும் தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களை கவரும் விதமாக அவர் பேசும்போது நண்பா, நண்பி என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை சிலர் தமிழ் இல்லை என்ற வாதம் செய்து இணையத்தில் பதிவு செய்து கலாய்த்து வருகிறார்கள். மேலும் சிலர் இது தமிழ் வார்த்தை தான் என்று பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் பா.விஜய் அவர்கள், சர்க்கார் வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய வார்த்தை நண்பி என்பது தமிழ் வார்த்தை தான் என்று உறுதி செய்துள்ளார். 


Advertisement