சினிமா

வரலாறு காணாத சாதனைப் படைத்த சர்க்கார்! படக்குழு அறிவிப்பு

Summary:

Sarkar first day record

நேற்று உலகமெங்கும் வெளியான சர்க்கார் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் அதிகப்படியான வசூலை பெற்றதில் சர்க்கார் முதலிடம் பிடித்துள்ளது. 

கடந்த ஜூன் 7ந் தேதி வெளியான ரஜினியின் காலா திரைப்படம் இதற்கு முன்னால் முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.76 கோடி வசூல் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்த சாதனையை சர்க்கார் முதல் நாளில் சென்னையில் மட்டும் 2.37 கோடி வசூல் பெற்று சாதனை படைத்துள்ளதாக சர்க்கார் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் சர்க்கார் முதல் நாளில் பெற்ற 32 கோடி தான் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் முதல் நாளில் பெற்ற அதிகப்பட்ச வசூலாகும். மேலும் உலகம் முழுவதிலும் முதல் நாளில் தோராயமாக 50 கோடிக்கு மேல் வசூலாகியிருக்கும் எனவும் படக்குழு பதிவிட்டுள்ளது. 

மேலும் சிங்கப்பூரில் முதல்முறையாக தமிழ் சினிமா ஒன்று முதல் நாளில் 3.1 கோடி வசூல் பெற்றதும் சர்க்கார் தான். 

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. எதிர்பார்த்தபடியே படம் பக்கா மாஸ் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயின் சர்கார் திரைப்படம் காலா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. மெர்சலையடுத்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் விஜய்.


Advertisement