சர்க்கார் வசூலை காலி செய்த டாஸ்மார்க் !
ஏ. ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம்.

நேற்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. எதிர்பார்த்தபடியே படம் பக்கா மாஸ் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#SARKAR Creates ALL TIME DAY1 Record In Chennai City With 2.37Cr. #BlockBusterSARKAR
— #SARKAR (@SarkarMovieOffl) November 6, 2018
நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் ரூ.2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசூல் சாதனை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வியாபாரம் சுமார் 3 கோடி என டாஸ்மாக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார். அதற்கு காரணம் மதுபானங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மது பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று மது விற்பனை தனி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உங்களின் தனிப்பட்ட கருத்துகளை கீழே பதிவு செய்யவும்..