சினிமா

மிகுந்த வருத்தமளிக்கிறது!! நடிகர் பாண்டுவின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல்!!

Summary:

நடிகர் பாண்டு மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் பாண்டு மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேண்டங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாண்டு. சினிமா மட்டுமில்லாமல் பல்வேறு டிவி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் பாண்டு.

தற்போது 74 வயதாகும் பாண்டு அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் பாண்டுவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

பாண்டுவின் மரணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சரத்குமார், "சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.


Advertisement