பக்கா திரில்லரில் கைகோர்க்கும் சரத்குமார்-சசிகுமார்... வெளியானது அட்டகாசமான ட்ரெய்லர்.!sarathkumar-sasikumar-pair-joining-hands-in-thrillerthe

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் ஆக வலம் வருபவர் சரத்குமார். 30 வருடங்களுக்கும் மேலாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கோலிவுடில் கம்பீரமாக வலம் வருபவர்.

சமீபத்தில் இவர் நடித்த போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் சசிகுமார்.

Kollywoodபல தோல்விப் படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி என்ற திரைப்படம் சமூக விழிப்புணர்வு படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சலீம் திரைப்படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் நாநா.

நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளி வந்த இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரில்லர் கதை களத்தை கொண்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.