பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக நடிக்கப்போவது இந்த நடிகையா? சித்துவை போல வருமா? வேதனையில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக நடிக்கப்போவது இந்த நடிகையா? சித்துவை போல வருமா? வேதனையில் ரசிகர்கள்!


saranya-going-to-act-in-mullai-role-in-pandian-store

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக குமரனும், முல்லையாக விஜே சித்ராவும் நடித்தனர்.

கதிர்- முல்லை ஜோடிக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம். இந்த நிலையில் நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

pandian store

 

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் இனி விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா திரிவேதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனாலும் முல்லை கதாபாத்திரத்தை யார் வந்தாலும் ஈடு செய்ய முடியாது என ரசிகர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர்.