குடும்பத்தோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை! அக்கறையோடு விடுத்த வேண்டுகோள்!!



Santhanam movie actrss corono positive

நடிகை வைபவி ஷாண்டில்யா தானும், தனது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. மேலும் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல பகுதிகளில் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர்கள் அமீர் கான், மாதவன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்நிலையில் தமிழில் நடிகர் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vaipavi shandilya

இதுகுறித்து அவர், தானும், தனது பெற்றோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.