"சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கு உயர்த்திய காமெடி நடிகர்!"

"சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கு உயர்த்திய காமெடி நடிகர்!"


Santhanam increased his salary

விஜய் டிவியின் "லொள்ளு சபா" நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சந்தானம். 2004ம் ஆண்டு "மன்மதன்" படத்தில் சிம்புவுக்கு நண்பனாக அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Santhanam

இந்நிலையில் 2008ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான "அறை எண் 305ல் கடவுள்" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பகாலங்களில் 1 லட்சம் சம்பளம் வாங்கிய சந்தானம், காமெடி நடிகராக வலம் வர ஆரம்பித்தவுடன் லட்சங்களில் சம்பளத்தை உயர்த்தியதாகவும், தற்போது கதாநாயகனாக நடிக்க மேலும் சம்பளத்தை உயர்த்தி கோடிகளில் வாங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

Santhanam

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தரியாரிக்கும் "பில்டப்" படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம், இப்படத்தில் நடிப்பதற்காக 3கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மேலும் "விரைவில் அவர் 30 கோடி சம்பளம் வாங்குபவராக உயரவேண்டும்" என்றும் கூறியுள்ளார்.