3 மாதங்களிலேயே இவ்வளவு மாற்றங்களா.! தலைச்சுற்றிப் போய் சாண்டி செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ!!
3 மாதங்களிலேயே இவ்வளவு மாற்றங்களா.! தலைச்சுற்றிப் போய் சாண்டி செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ!!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் தொலைக்காட்சியில் 105 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.
சாண்டி பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம்.
அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர், தனது பிக்பாஸ் நண்பர்களுடன் ஊர் சுற்றிவந்தார். மேலும் தனது மகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வந்த அவர் சமீபத்தில் குடும்பத்துடன் விருதுவிழா ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்த விழாவில் சாண்டி மற்றும் அவரது காதலி சனம் ஷெட்டியும் கலந்து கொண்டனர்
அதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற மாற்றம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் கோமாளி திரைப்படத்தை பற்றியும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.