சினிமா

ஆக்ரோஷமாக பேசிய வனிதாவை காமெடி பீஸாக்கி சாண்டி செய்த காரியம்.! மற்ற போட்டியாளர்களின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!!

Summary:

sandy dubbing to vanitha angry speech viral video

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Related imageஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக மீண்டும்  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் சாண்டி, லாஸ்லியா, கவின், முகேன், அபிராமி ஆகியோர் வீட்டின் வாசலில் அமர்ந்து வீட்டின் உள்ளே வனிதா, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் ஆக்ரோஷமாக பேசுவதற்கு டப்பிங் கொடுத்துள்ளனர். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement