சினிமா

தர்சனின் காதலி சனம் ஷெட்டியா இது.! புடவையில் என்னம்மா அசத்துறாங்க பார்த்தீங்களா!!

Summary:

Sanam shetty in saree photo viral

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது.

இந்நிலையில் தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாகவும்,  இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படமும் அவ்வபோது வைரலானது. மேலும் அவர் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக சமூக வலைதளபக்கத்தில் கருத்துக்களை தெரிவித்தும் வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் இருவரும் சந்தித்துள்ளனர். 

இந்நிலையில் செம மாடலாக, கவர்ச்சியாக இருக்கும் சனம் வெட்டி தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு புடவை அணிந்து மிகவும் ஹோம்லியாக சென்றுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement