13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திடீரென வாழ்த்துக் கூறிய நடிகை சமந்தா! அட.. என்ன விஷயம்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித்,சூர்யா,தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். மேலும் இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என இருந்து வருகின்றனர். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து படங்களையும் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இணைந்து தயாரித்த கூழாங்கல் என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் அதற்கு வாழ்த்துக் கூறிய நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு எனது பெரிய வாழ்த்துக்கள். இது மிகவும் சிறப்பான செய்தி. மேலும் கூழாங்கல் பட குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.