சினிமா

இன்று திருமண நாளில் நாளில் சமந்தா போட்ட பதிவு! இவரே போன வருஷம் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

இன்று திருமண நாளில் நாளில் சமந்தா போட்ட பதிவு! இவரே போன வருஷம் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தக்க இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. காதல் ஜோடியான இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வந்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

இது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இன்று சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் நான்காம் ஆண்டு திருமண நாள். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு , பழைய காதலின் பாடல்கள் மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள், பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள், பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி என்று பதிவிட்டுள்ளார்.

இவரே கடந்த ஆண்டு தனது திருமண நாளில், கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நீ எனக்கானவன் நான் உனக்கானவள். எந்த கதவு வந்தாலும் அதை நாம் இருவரும் ஒன்றாக இணைந்து திறப்போம்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கணவா என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement