நாய்க்குட்டிகளுடன் விளையாடி மகிழும் சமந்தா.. வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தனது விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து சினிமாவில் தனது இடத்தை நிலைநாட்டி வருகிறார் சமந்தா.
சமீபத்தில் தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்று வருகின்றன. இறுதியாக இவர் நடிப்பில் விஜய் தேவர் கொண்ட கதாநாயகனாக நடித்த குஷி திரைப்படம் வெளியானது.
இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனை அடுத்து சமந்தா தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தாக்கத்தினால் தற்போது தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக கூறியிருந்தார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வரும் சமந்தா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். தற்போது தனது வீட்டு செல்லப் பிராணிகளுடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தாவை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.