நாய்களுடன் சண்டை போட்டு விளையாடும் சமந்தா.. வைரலாகும் வீடியோ.!

நாய்களுடன் சண்டை போட்டு விளையாடும் சமந்தா.. வைரலாகும் வீடியோ.!



Samantha instagram story video viral

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. தனது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி வருகிறார். 

samantha

மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் சமந்தா, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பினால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் சமந்தா.

இதனையடுத்து திரைத்துறையில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்ட சமந்தா தற்போது விளம்பர படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார் சமந்தா.

samantha

இது போன்ற நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் செல்லப் பிராணிகளுடன் சண்டை போட்டு விளையாடுவது போன்ற வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.