உயிருக்கு போராடிய பிரபல இளம் நடிகை! சமந்தா இப்படி செய்தாரா?? சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்!!

உயிருக்கு போராடிய பிரபல இளம் நடிகை! சமந்தா இப்படி செய்தாரா?? சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்!!


samantha-help-to-telungu-actress-for-done-her-surgery

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவருக்கு என தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன. மேலும் நடிகை சமந்தா பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் சமந்தா குறித்து தெலுங்கு நடிகை தேஜஸ்வி மாதிவாடா பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

samantha

தேஜஸ்வி மாதிவாடா தெலுங்கில் பாபு பாக பிஸி, ஐஸ் கிரீம், கமிட்மென்ட்  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். அவர் கூறியதாவது, சின்னவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் நான் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவிற்கு வந்த பிறகும் நான் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்நிலையில் எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்பொழுது அறுவை சிகிச்சை செய்ய கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்தசமயத்தில்  சமந்தாதான் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்து என் உயிரை காப்பாற்றினார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.