அம்மணி செம ஹேப்பி! 5வது முறை.. சமந்தாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை! அதுவும் எதனால் தெரியுமா??

அம்மணி செம ஹேப்பி! 5வது முறை.. சமந்தாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை! அதுவும் எதனால் தெரியுமா??


samantha-got-flimfare-award-for-the-familyman-2

தமிழ் சினிமாவில் பாணா
காத்தாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, பின்னர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் ஹிந்தியில் ஜூன் மாதம் வெளிவந்த தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பல சர்ச்சைகளைத் தாண்டி ஓடிடி தளத்தில் வெளிவந்த இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்ததற்காக சிறந்த நடிகை ஓடிடி என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். இந்நிலையில் விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட சமந்தா, எனது 5வது பிளாக் லேடி. எனக்கு வாக்களித்த உங்கள் ஒவ்வொருவருக்கும், மிக்க நன்றி. இன்று என்னை மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியுள்ளீர்கள். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.