ப்பா.. 12 வருஷமாச்சு! செம ஹேப்பியில் நடிகை சமந்தா! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

ப்பா.. 12 வருஷமாச்சு! செம ஹேப்பியில் நடிகை சமந்தா! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


samana-tweet-about-12-years-of-cinema-experience

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பால், திறமையால் உயர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக கொடிகட்டி பறக்கிறார்.

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் வகையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், இன்றுடன் நான் சினிமா துறையில் காலடி  வைத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 12 ஆண்டுகளிலும் என்னை சுற்றிலும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் எனக்கு சிறந்த ஆசிர்வதிக்கப்பட்ட தருணமாக இருந்தது. மேலும், எப்பொழுதும் என் பக்கம் நிற்கும் உலகிலேயே விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றுள்ளேன். அதுவே எனது பெரும் பாக்கியம்  என கூறியுள்ளார்.