பாட்டில் மூடி சவால்!! பிரபல பாலிவுட் நடிகர் செய்துள்ள கேலியான வேலையை பார்த்தீர்களா!! வீடியோ உள்ளே!

நாளுக்கு நாள் சமூகவலைதளங்களில் வித்தியாசமான சவால்கள் ட்ரண்டாவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் என்ற சவால் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த சவாலில் தனது முன்னாள் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில் மூடியை தனது காலை சுழற்றி, வேகமாக மேலே தூக்கி அதன்மூலம் திறக்க வேண்டும். இதனை ஹாலிவுட் அதிரடி ஆக்சன் நடிகர் ஜேசன் ஸ்டதம் தொடங்கி வைத்தார்.
இந்த சவால் வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன நிலையில் நெட்டிசன்கள் மட்டுமின்றி பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் அனைவரும் இதனை ஆர்வமாக செய்து வருகின்றனர். மேலும் நடிகர் அர்ஜுனும் இந்த சவாலை மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்துள்ளார். அதில் அவர் காலை தூக்காமல், வாயால் ஊதி பாட்டிலைத் திறந்து அதிலுள்ள தண்ணீரை குடித்துமுடிக்கிறார். மேலும் விளையாட்டாக செய்துள்ள இந்த வீடியோவை சல்மான்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.