பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு சம்பளம் இவ்வளவா?? வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
இந்நிலையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சல்மான் கானுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 250 கோடி வழங்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒருநாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசன் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.