சினிமா

திரையரங்கில் இளநீர் விற்பனை...! தமிழ் திரைப்படத்தால் ஏற்பட்ட மாற்றம்..

Summary:

kadaikutty singam reflexion sale tender coconut in theatres

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில்,  வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம்  "கடைக்குட்டி சிங்கம்". இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி இந்த படத்தில் ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கார்த்தி, ஒரு விவசாயியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 

kadaikutty singam க்கான பட முடிவு

தமிழகத்தில் மட்டும் இன்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ராம் முத்துராம் திரையரங்கில் முதல்முறையாக இளநீர் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திரையரங்க நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !! 

விவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.  

ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !!
விவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி 😊@Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/IubVKGdsQY

— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 22, 2018

 

இந்த திரையரங்கம் போல, மற்ற திரையரங்கத்திலும் இதே போன்று இளநீர் விற்பனை செய்தல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Advertisement