பிக்பாஸ் சாக்ஷிக்கு ஏன் இந்த திடீர் கோபம்.! எதற்காக இப்படி கூறியுள்ளார்? ஒற்றை பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!!



sakshi angry tweet to netrisan for troll her

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் விறுவிறுப்பாகவும் , நாளுக்கு நாள் பரபரப்பாகவும்  நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகிய போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைதியாக சென்றுகொண்டிருந்த வீட்டிற்குள்  சர்ச்சைகளை கிளப்பும் வகையில் விருந்தினராக வனிதா மீண்டும்  நுழைந்தார். அதனை தொடர்ந்து சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

Sakshi

இந்நிலையில் தனது முக்கோண காதலால் பல சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியவர் நடிகை சாக்ஷி அகர்வால். சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மாடலாக இருந்து நடிகையாக களமிறங்கிய சாக்‌ஷி ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல மீம்களும், ட்ரோல்களும் வெளிவந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகும் கிண்டல்கள் தொடர்ந்தது. அவர்  வெளியிடும் பதிவுகளுக்கு கிண்டல் செய்து பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதனால் கோபமடைந்த சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய டுவீட் என்னுடைய உரிமை. அமைதியாக உங்கள் வாழ்க்கையை பாருங்கள்! இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு பேசும் உரிமை உள்ளது. கிண்டல் செய்பவர்கள் என்னை பற்றி பேசுவதை நிறுத்துங்கள். பயனுள்ள ஏதாவதை செய்யுங்கள். மேலும் தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு போய் கோவில் கட்டுங்கள்' என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.